விசாரணை அதிகாரி சந்தானம்,கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாக தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல வற்புறுத்தியதாகக் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, 5 நாட்கள் சிபிசிஐடி விசாரணை முடிந்து நேற்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்காக நிர்மலா தேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி கோராததால் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மே 9ஆம் தேதி வரை நிர்மலா தேவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவியிடம் ஆளுநர் பன்வாரிலால் அமைத்த ஒரு நபர் விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்தினார். மதுரை மத்திய சிறைக்கே நேரில் சென்ற சந்தானம் அங்கு நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு தொடங்கும் என சந்தானம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…