மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் :சிறையில் பேராசியை நிர்மலாதேவியிடம் தீவிர விசாரணை!

Published by
Venu

சந்தானம் குழுவினர் ,மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசியை நிர்மலாதேவியிடம்,விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழு மதுரையில் இரண்டாம் கட்ட விசாரணையைத் நேற்று தொடங்கியது. துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், பல்கலைக்கழக அலுவலர்கள் பணியிடமாற்றம் குறித்தும் விசாரித்தாகவும் சந்தானம் தெரிவித்தார். சிறைத்துறை அனுமதி பெற்று நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 9.25 மதுரை சிறைக்குச் சென்ற சந்தானம் மற்றும் பெண் விசாரணை அதிகாரிகள் தியாகேஸ்வரி, கமலி ஆகியோர் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை பதிவு செய்ய வீடியோ கேமரா மேன் ஒருவரையும் அவர்கள் அழைத்துச் சென்றனர்.

இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை 4 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நிர்மலா தேவி கூறிய முருகனிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் ஆராய்ச்சி மாணவரான கருப்பசாமி பல்வேறு இடங்களில் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருப்பசாமியை இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கருப்பசாமிக்கு 10 நாள் காவல் கோரி சி.பி.சி.ஐ.டி. சார்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்து நீதிபதி கருப்பசாமியை 4 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க அனுமதியளித்தார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்! 

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

6 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

6 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

6 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

7 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

7 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

8 hours ago