பேராசிரியை பேசும் ஆடியோவில் 5 மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களிடம் செல்போனில் பேசும் பேராசிரியை ஐந்து பேருக்கும் ஆசை வார்த்தை கூறி, ‘மதிப்பெண் மற்றும் பெரிய அளவில் பணம் கிடைக்கும். சில பெரிய மனிதர்களுக்கு நீங்கள் தேவை. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் உங்களை அணுகியுள்ளேன். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறும்’ என்று ஆசை காட்டிப் பேசுகிறார்.
ஆளுநர் மாளிகை வரை எனக்கு செல்வாக்கு உள்ளது, மேலும் இதில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிலரும் உள்ளனர் என்றெல்லாம் பேசி உள்ளார் என்றெல்லாம் பேசி மிகப்பெரிய விஐபிக்கு தேவை. அவர் பெயரைச்சொன்னாலே நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்கிறார். இந்த ஆடியோ இரண்டு நாட்களுக்கு முன் வெளியே வந்தது. இது நாடெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
பேராசிரியை நிர்மலா தேவி மீது தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தது.இதையடுத்து அருப்புக்கோட்டை போலீஸார் பேராசிரியர் நிர்மலா தேவி மீது, குற்றம் செய்ய வற்புறுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அருப்புக்கோட்டை டிஎஸ்பி தலைமையில் போலீஸார் பேராசிரியை நிர்மலா தேவியை நேற்றிரவு கைது செய்தனர்.
பின்னர் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு நிர்மலா தேவியை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை இரவு 2 மணி வரை உயர் அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் காலையிலும் விசாரணை தொடர்ந்தது. கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாலை 7 மணி அளவில் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மும்தாஜ் முன் நிர்மலா தேவியை போலீஸார் ஆஜர்படுத்தினர்.
ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவியை வரும் ஏப்.28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் மும்தாஜ் உத்தரவிட்டார். நிர்மலா தேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அருப்புக்கோட்டை போலீஸார் முடிவு செய்துள்ளனர். நாளை இதற்காக மனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.