மாணவர்கள் 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பெயர்ப்பட்டியல் திருத்தங்களுக்கு இறுதி வாய்ப்பு!
மாணவர்கள் 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில் பெயர்ப்பட்டியல் திருத்தங்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாணவர் பெயர், தலைப்பெழுத்து, பிறந்த தேதி, பள்ளியின் பெயர் உள்ளிட்ட திருத்தங்களுக்கு தேர்வுக்கு முன்பே பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில் திருத்தங்கள் தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்து அணுகிவருவதாக கூறப்பட்டுள்ளது. தொடர்புடைய பள்ளிகள் மாணவர் குறித்த திருத்தங்களை தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டு முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கவும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் இன்றும் வரும் 11-ஆம் தேதியும் அரசுத் தேர்வுத்துறை இணையதளத்தில் தங்கள் யூசர் ஐடி, பாஸ்வேர்டைப் பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.