மாணவர்களுக்கு குட் நியூஸ்..!இனி கவலை வேண்டாம் ..!வீட்டுப்பாடம் இனி கிடையாது!
2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுக்க என்று விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புருசோத்தமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.பின்னர் அவர் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்றும் இதை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஏற்கனவே பிறபித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் அது தொடர்பான அறிக்கையை அளிக்கும்படியும்,யூனியன் பிரதேசங்களுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.
பின்னர் மாநிலங்களின் நிலைபாடுக்காவும் காத்திருப்பதாக தெரிவித்தார்.
இதேபோல் இதுவரை 2ஆம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவு குறித்து எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை எனவும்,இன்னும் 14 நாட்களில் சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும் சி.பி.எஸ்.இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுட ன் இணைந்திருங்கள்.