மழை_ க்கு விடுமுறை கிடையாது…சோகத்தில் மாணவர்கள்…பள்ளி கல்வி துறை புதிய உத்தரவு…!!
மழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுமுறை விடுவதில் கட்டுப்பாடுகள் விதித்து இன்று பள்ளி கல்வி இயக்குனர் பிரதீப் யாதவ் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மழை காலங்களில் மழை பெய்யும் என்று அறிவிப்பு என்று வெளியானதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை உத்தரவை அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர் ஆறிவிப்பார்.இந்நிலையில் பள்ளி கல்வி இயக்குனர் பிரதீப் யாதவ் இன்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய சுற்றைக்கையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பதித்தல் மட்டுமே இனி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் இனிமேல் மழை-யானது எந்த பகுதியில் பெய்கின்றதோ அந்த பகுதிக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும்.வருவாய் வாரியாக விடுமுறை விட வேண்டுமென்று அவசியமில்லை.அதே போல விடுமுறை விட்டதற்கு மாற்று வேலை நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.விடுமுறைக்கு மாற்று எந்தநாள் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
dinasuvadu.com