தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது.
இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியினை கண்டுகளிக்கும் விதமாகவும் பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.
வாடிவாசலில் சீறிப்பாய 700 காளைகள் திமிளை காட்டிவாறு நிற்கின்றன இந்த காளைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, கம்பம் மற்றும் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் இருந்து வருகின்ற காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட வேண்டும்.
என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் அவர்களின் தலைமையிலான குழுவானது இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில் பலச்சுற்றுகள் கொண்டு நடைபெற்று வருகிறது.கலர்கலர் டிசார்க்களில் களத்தில் சீறிப்பாயவரும் காளைகளோடு மல்லுக்கட்டும் இளங்காளைகள் என அவனியாபுரமே திருவிழா பூண்டு காணப்படுகிறது.
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…