தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது.
இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியினை கண்டுகளிக்கும் விதமாகவும் பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.வாடிவாசலில் சீறிப்பாய 700 காளைகள் திமிளை காட்டிவாறு நிற்கின்றன இந்த காளைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் அவர்களின் தலைமையிலான குழுவானது இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் காயங்களும் சில மாடுபிடிவீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு களத்திற்கு வெளியே சென்ற தன் மாட்டை பிடிக்க முயன்ற அந்த மாட்டின் உரிமையாளர் விக்னேஷ் மீது மற்றொரு மாடு முட்டியதன் விளைவாக காயமடைந்தார். மேலும் மாடு முட்டியதன் விளைவாக சில வீரர்கள் காயமடைந்தனர் அதனடி விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்து சிகிச்சை அளிப்பட்டுள்ளது.மேலும் இருவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…