மலைகோட்டை பயணிகளை பாடாய்படுத்தும் ரயில்வே நிர்வாகம்

Default Image

திருச்சி to சென்னை இடையே செல்லும் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சி வழ் மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கும்பகோணம் மார்க்கமாக அகலபாதை பயணிகளுக்காக மாற்றப்பட்ட தடத்தை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மீட்டு 2015ஆம் ஆண்டு இறுதி முதல் திருச்சியிலிருந்து இயக்கபடுகிறது.

ஆனால் தற்போது ரயில்வே துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலில் இந்த ரயில் அதி விரைவு வண்டி என கூறி கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் வழக்கமாக திருச்சியிலிருந்து இரவு 10.30க்கும், சென்னையிலிருந்தும் இரவு 10.30க்கும் புறப்பட்டது, இப்போது திருச்சியிலிருந்து இரவு  10.40க்கும், சென்னையிலிருந்து இரவு 11.30க்கும் புரபடுகிறது. இதனால் தாம்பரம் கடக்க இரவு 12 ஆகிவிடுவதால் மறுநாள் என்றாகிவிடுகிறது. இதனால் டிக்கெட் பரிசோதகருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.பயணிகள் சங்கம் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. 

இதனை தொடர்ந்து ரயில் நிலையத்திலயே டிக்கெட் பரிசோதிக்கும் முறை இருந்த்தது. இதுவும் கடந்த நான்கு நாட்களாக நடந்த இச்சோதனை இப்போது பயணிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

இது தொடர்பாக திருச்சி நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சேகரன் மற்றும் சண்முகவேலு ஆகியோர் கூறியதாவது, ‘ரயில்வே நிர்வாகம் பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளது. பயணிகளின் நலத்தை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை, இன்னும் என்னென்ன இடையுறுகள் செய்ய போகிறார்களோ தெரியவில்லை’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்