மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்..!!
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன். புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் காலமானார். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், வானம் வசப்படும் புதினத்திற்காக சாகித்யா அகாடெமி விருதையும் பெற்றுள்ளார். பிரபஞ்சனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இன்று மாலை பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.