மருத்துவ உபகரணங்கள் பயன்பாடு புகார் பற்றி விசாரிக்கப்படும் ! அமைச்சர் விஜயபாஸ்கர்
திருச்சி அரசு மருத்துவமனையில் தரமற்ற மருத்துவ உபகரணங்கள் பயன்பாடு புகார் பற்றி விசாரிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் , திருச்சி அரசு மருத்துவமனையில் தரமற்ற மருத்துவ உபகரணங்கள் பயன்பாடு புகார் பற்றி விசாரிக்கப்படும். அரசு மருத்துவமனை டீன் தலைமையில் விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்படும்.அரசு மருத்துவமனைகளுக்கு சர்வதேச தரத்தில் உபகரணங்கள் வாங்கப்படுகிறது
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிப்பதை தடுப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.