மருத்துவர்கள் போராட்டம் கைவிட அரசு நடவடிக்கை…உயர்நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை…!!
மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் சற்று சிறமத்திற்கு உள்ளானார்கள்.
இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, பத்திரிகையாளர் வாராகி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசரமாக இன்றே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதால், மனுதாரர் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வரிசையின் அடிப்படையில் அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
DINASUVADU.COM