மரணபீதியில் தமிழகம்…அடுத்தடுத்து மரணம்…டெங்கு , பன்றிக் காய்ச்சல் கதிகலங்கும் மக்கள்..!!

Default Image
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச் சலுக்கு மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரை திருநகரைச் சேர்ந்தவர் தர். இவரது மகள் ஐஸ்வர்யா (9). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு சில நாட்களா கவே காய்ச்சல் இருந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றபோது, அவர் டெங்கு காய்ச்சல் தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா நேற்று உயிரிழந்தார்.
மதுரையில் 20 பேர்
மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்க ளுக்கு சிறப்பு வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேலூரில் 2 பேர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பீமாபுரம் கிராமத்தைச் சேர்ந் தவர் விவசாயி ராமமூர்த்தி (57). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றார். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் தனி யார் மருத்துவமனைக்கு மாற்றப்பட் டார். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராமமூர்த் திக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தனி வார்டில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, பீமா புரம் கிராமத்தில் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. எனவே, சுகாதாரத் துறையினர் மருத்துவ முகாமை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மர்மக் காய்ச்சல்
அரக்கோணம் அடுத்த அன்வர்தி கான்பேட்டையைச் சேர்ந்தவர் மாஷா என்பவரது மகன் ரியாஸ் (7). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந் தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப் பட்ட ரியாஸ், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்ததால், உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரியாஸ் வரும் வழியி லேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவன் உயிரிழப் புக்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள வாழைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவேகானந் தன் மகன் சரவணன்(14). 8-ம் வகுப்பு மாணவர். கடந்த சில நாட்க ளாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருந்த சரவணன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி யைச் சேர்ந்த ரபீக் (40). செல்ஃ போன் கடை வைத்து நடத்தி வந்த இவர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் நேற்று உயிரிழந்தார்.
நெல்லை, குமரி
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் இருவர் அனுமதிக் கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் பன்றிக் காய்ச்சல் பாதித்த 15 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாவட்டத்தில் ஏற்கெனவே இருவர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்