மயங்கி விழுந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது..!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள படச்சேரியில், உடல்நலக்குறைவால் குடியிருப்பு பகுதி அருகே மயங்கி விழுந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பந்தலூர் அருகே படச்சேரி கிராமத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, உணவு தேடி அலைந்த நிலையில், வீட்டின் சுற்றுச்சுவரை நொறுக்கியது.
அப்போது அந்த யானை திடீரென மயங்கி விழுந்துள்ளது. காலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் வனத்துறையினர் யானையை மீட்டு சிகிச்சை கொடுத்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.