மனித பலத்தை நம்பியே நான் களமிறங்கியுள்ளேன் : ஹெச்.ராஜா
- நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது, என்றும் இதனை தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம்.
- மனித பலத்தை நம்பியே, தான் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை ஆலங்குடியில், அதிமுக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
அதன்பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது, என்றும் இதனை தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிவகங்கை தொகுதியில் பணபலம் சவாலாக இருக்கும் என்றும், அதைப்பற்றி கவலைப்படாமல் மனித பலத்தை நம்பியே, தான் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் குடும்பத்தினர் நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து வரும் நிலையில், அவர்கள் எப்படி மக்கள் பணியாற்ற முடியும், என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.