மனநல மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்கிறார் ஹெச்.ராஜா…!உயர்நீதிமன்றம் உத்தரவு…!
சென்னை காவல்துறை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வலியுறுத்தும் மனு மீது உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் ஹெச்.ராஜா பேசி வருவதால், பொது அமைதிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்துள்ளார்.
ஹெச்.ராஜாவை கைது செய்து உரிய மனநல மருத்துவரின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரி மார்ச் 7ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், சம்மந்தப்பட்ட காவல் துறையினரிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.