மனதால் மறக்க முடியாத தூத்துக்குடி துப்பாக்கி சூடு..!!பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு..!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட தூப்பாக்கி சூட்டால் 13 உயிர்களை இரக்கமற்ற முறையில் காவு வாங்கியது.
ஸ்டெர்லைட் எதிராக போராட்டம் தூத்துக்குடியில் வெடிக்க அது போராட்டமாக மாறி மக்கள் கொதித்து எழுந்தனர்.இதனால் அவர்களை அடக்க கண்மூடித்தனமாக போலீசாரால் தூப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இந்த தூப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி உயிர்கள் பறிபோனது.
இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இணைய சேவையும் அரசால் முடக்கப்பட்டது.ஆட்சியர் மாற்றப்பட்டு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டார்.இன்றும் மக்களால் மறக்கமுடியாத நிகழ்வாக இந்த தூப்பாக்கி சூடு உள்ளது.தூத்துக்குடி மக்கள் 13 உயிர்களை பறிகொடுத்து உயிர்களை பறிகொடுக்க காரணமாக இருந்த ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக மக்கள் இன்றும் போராடி வருகின்றனர்.ஆனால் அதற்கு செவிசாய்பதாக தெரியவில்லை பசுமை தீர்ப்பாயம்.இந்நிலையில் இந்த தூப்பாக்கி சூடு தொடர்பாக விசாரிக்க ஆணையம் ஒன்று நியமிக்கபட்டது.அந்த ஆணையம் விசாராணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் கட்டவிழ்த்து விடப்பட்ட அதிகாரத்தால் அநிநியாமாக 13 உயிர்களை கொன்றது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பாதி பேருக்கு பின்புறத்திலிருந்து தோட்டா பாய்ந்துள்ளது .தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறுவியல் குழுவால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 8 பேருக்கு தலை மற்றும் மற்றும் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. அதில் ஜான்சி என்ற பெண்ணின் காதில் சுட்டதாலும், மணிராஜன் என்பவர் நெற்றியில் குண்டு பாய்ந்ததால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.