மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு சமமான – நியாயமான பகிர்வு!
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜி.எஸ்.டி. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து உடனடியாகத் திருத்திமைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு சமமான – நியாயமான பகிர்வு கிடைக்க தற்போதைய ஆய்வு வரம்புகள் உதவாது என்று அவர் கூறியுள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் 1971 மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறையும், நிதிப்பகிர்வு கடைபிடிக்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதிப்பங்கீட்டை பரிந்துரைக்கலாம் என கூறப்பட்டிருப்பது தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு நிதிப் பங்கீட்டில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.