மத்திய – மாநில ஆட்சிகள் ஜாடிக்கேற்ற மூடி போல உள்ளன…! திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு துரோகம் செய்வதாக, 3வது நாளாக காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று காலை தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் 2வது நாள் பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், மாலையில் வாண்டையார் இருப்பில் நிறைவு செய்தார். இதையடுத்து, டி.ஆர்.பாலு, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் இன்று காலையில் தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் 3வது நாள் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.
இரும்புதலை, திருக்கருக்காவூர், சாலியமங்கலம் உள்பட 10 கிராமங்கள் வழியாக, காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், வழிநெடுகிலும், விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, குறைகளை கேட்டறிகிறார். பிற்பகலில் அம்மாப்பேட்டை அருகே புத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றிய ஸ்டாலின் மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.