மத்திய, மாநில அரசுக்கு எதிராக பேச ரஜினிகாந்த்துக்கு பயம்! திருமாவளவன்

Default Image

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ,தூத்துக்குடி சம்பவத்தில் யார் சமூக விரோதிகள் என ரஜினிகாந்த் அடையாளப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரில் சென்ற ரஜினிகாந்த் அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், மக்கள் சக்திக்கு முன்னால், எந்த சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி உள்ளனர்.

சமூக விரோதிகளிடம் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகம் போராட்ட பூமியாக இருந்தால் எந்த தொழிலும் வளமும் பெருகாது. ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது சமூக விரோதிகள் தான். ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பை எரித்ததும் சமூக விரோதிகள் தான்.

உளவுத்துறையின் தவறால் தான் வன்முறை நிகழ்ந்துள்ளது. காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களை விட்டுவிடக் கூடாது. எல்லா பிரச்சனைகளிலும் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது நியாயமாகாது. இத்தனை போராட்டத்திற்குப் பின்னரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் ஆலை நிர்வாகத்திற்கு வரவே கூடாது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்தனர்; புனிதப் போராட்டம் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது. ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை. சமூக விரோதிகளை ஜெயலலிதா வழியில் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறிய பின், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி அறிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மத்திய, மாநில அரசுக்கு எதிராக பேச அச்சப்படும்  நிலையில் ரஜினிகாந்த் உள்ளதாக தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என்று கூறும் ரஜினி, அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்