மத்திய , மாநில அரசுகள் நடத்தும் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறும் அளவிற்கு தேர்வு போட்டி பயிற்சி மையம் தொடக்கம்…!!
சென்னை : வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி வளாகத்தில், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் துவக்க விழாவை அமைச்சர் ஜெயக்குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
3 மாதத்திற்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த மையத்தில் பயிற்சி பெரும் ஒவ்வொரு மாணவர்களுக்கு ரூ.1000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இவ்வகுப்பானது திங்கள் முதல் வெள்ளி வரை, பயிற்சி நேரம் தினமும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை நடைப்பெறும். இந்த இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் பயில வயதுவரம்பு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய , மாநில அரசுகள் நடத்தும் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறும் அளவிற்கு தேர்வு போட்டி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.100 சதவிகிதம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.