மேகதாது அணை விவகாரத்தில், தமிழகத்தின் ஆட்சேபனை கவனத்தில் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், புதிய அணை கட்ட முடியாது என்று அதன் தலைவர் மசூத் உசேன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ள கர்நாடக அரசுக்கு இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு, மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்றும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே மேகதாது அணையை கட்டுவதாகவும், காவிரி தங்கள் பகுதியில் இருப்பதால், அணை கட்டுவதற்கு உரிமையுள்ளது என்றும் கர்நாடகம் வாதிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், கட்டுமான தொகையை நீர்வள ஆணையமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேரள தரப்பு வாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், அணை கட்ட அனுமதி அளித்த மத்திய நீர்வள ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
dinasuvadu.com
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…