மத்திய அரசு செய்த தவறு தான் பெட்ரோல் விலை உயர காரணம்! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Default Image

எண்ணெய் நிறுவனங்களிடம் நிர்ணய உரிமையை தந்ததால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.மேலும் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது,இந்த உயர்வை நான் கண்டிக்கிறேன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதேபோல் அவர் கூறுகையில் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவால் மத்திய அரசு பயன் அடைந்துள்ளது” என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்றைய  பெட்ரோல் விலை நிலவரம்:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 6 மணி முதல் இந்த விலை அமலுக்கு வந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்