மத்திய அரசு காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதில் தவறில்லை…!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்டதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பாஜகவுக்கு மாற்றுக்கருத்து இல்லை என தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும், தமிழக அரசு தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
49 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதன் மூலம் மத்திய அரசு, நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.