தமிழக அரசு ,காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு மேலும் தாமதம் செய்தால் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளிநாட்டுப் பயணத்தை முடித்து இந்தியா திரும்புகிறார்.
இதனால் விரைவில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான ஆணை வெளியிடப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உறுதியளித்துள்ளார். தென்மேற்கு பருவ மழைக்காலத்திற்கு முன்பாக ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பாகவே கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இருப்பினும் இதுவரை மத்திய அரசுத் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பதால் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…