மத்திய அரசின் இணையவழி நூலகத்தில் தமிழ் மொழி விரைவில் இணைக்கப்படவுள்ளது!அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்
மத்திய அரசு சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையவழி நுாலகத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.இணையவழி நுாலகத்தில் தமிழ் மொழியை கொண்டுவர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்,
மத்திய அரசின் இணையவழி நூலகத்தில் தமிழ் மொழி விரைவில் இணைக்கப்படவுள்ளது என்று அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சோதனை முறையில் இந்தி,ஆங்கிலம், சமஸ்கிருதம் இணைக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார் என்று ஸ்டாலின் கோரிக்கைக்கு அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.