மத்திய அமைச்சருடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு…!!!

Default Image

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு நடந்துள்ளது.

Related image

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் சந்துப்பு நடந்துள்ளது இந்த சந்திப்பு எதற்கு என்றால் அனல் மின் திட்டத்துக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை அமைச்சர் தங்கமணி நேரில் வலியுறுத்தி உள்ளார்.

Image result for thangamani -pusgoil

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 2020-21ம் ஆண்டிற்க்கான வட சென்னை, உப்பூர், உடன்குடி, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய அனல் மின் திட்டங்களுக்கு நிலக்கரி தேவை படுவதால் டெல்லி சென்று தமிழ்நாட்டின் நிலக்கரி தேவையை அமைச்சர் தங்கமணி, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து பேசினார்.மேலும் மழைக்காலம் தொடங்க இருப்பதால் அனல்மின் நிலையங்களில் வெறும் 15 நாட்களுக்கு தான் நிலக்கரி கையிருப்பு இருப்பதாக தெரிவித்த அமைச்சர் தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 20 ரயில்களில் நிலக்கரியை அனுப்புமாறு அமைச்சர் மத்திய அமைச்சரை வலிறுத்தியுள்ளார்.

Related image

இந்த சந்திப்பை முடித்து விட்டு அப்படியே  எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்த அமைச்சர் தங்கமணி தமிழ்நாட்டிற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து ஏற்கனவே தரவேண்டிய 6 ஆயிரத்து 312 மெகாவாட்டில் தற்போது 3 ஆயிரத்து 376 மெகாவாட் மட்டுமே கிடைக்கிற எனவே தமிழகத்திற்கு முழுமையாக தொடர்ந்து மின்சாரம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.அமைச்சரின் இந்த சந்திப்பு நிலக்கரி பற்றாக்குறையை படம்பிடித்து காண்பித்துள்ளது.பருவமழை தொடங்கும் முன் நிலக்கரி கிடைத்தால் தான் தமிழகமும் மின்வெட்டுலிருந்து தப்பிக்க முடியும்.மக்களை மழை காலங்களில் சிரமப்படுத்தாதீர்கள் உரிய நிலக்கரியை உடனே அழுத்தம் கொடுத்து வாங்குங்கள் என்று சமூக ஆர்வலர்கள் பொறிந்து தள்ளுகின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்