மதுரை
திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் ஆயிரம் கண்ணுடையாள் கோவில் அருகே ராஜபாளையம்- திருமங்கலம் ரோட்டில் சிறிய பாலம் உள்ளது அமைந்துள்ளது.
இந்த பாலத்தின் அடியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருமங்கலம் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் அந்த பகுதியில் பார்த்தபோது 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.
உடனே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? என்பது குறித்து அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சடலமாக கிடந்தவர் யார்..? கொலையா..? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…
DINASUVADU