மதுரை ஆதீனம் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து என்ன சொல்கிறார்?
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நரேந்திர மோடி அரசு பக்தியுள்ள அரசு, என கருத்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நரேந்திர மோடி அரசு பக்தியுள்ள அரசு என்பதாலும், மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழகத்திற்கு அவசியம் என்பதாலும், அதனை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தமிழக அரசு மட்டும் முயற்சி செய்தால் போதாது, என தெரிவித்துள்ள மதுரை ஆதீனம், இவ்விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சிறு வயது முதல், நடித்து வரக்கூடிய நல்ல நடிகர் என தெரிவித்துள்ள மதுரை ஆதீனம், அவர் தனது கொள்கைளை தெளிவாகக் கூறிய பிறகு, அவரது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.