மதுரையில் ரூபாய் 17,00,000 மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்..!!
மதுரை விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இன்று காலை மதுரையில் இருந்து கொழும்பு புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகள் குடியேற்றச் சோதனை, உடைமைகள் சோதனை ஆகியவற்றை முடித்து விமானத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்த விமானத்தில் வெளிநாட்டுப் பணம் கொண்டு செல்லப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் மதுரை சுங்கத்துறை நுண்ணறி பிரிவு அதிகாரிகள் விமானத்துக்குள் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது விமானத்தில் இருந்த திருநாவுக்கரசு, மணிவண்ணன், கரிகாலன், சையது முகமது, ஜவாகிர் ஆகியோரின் உடைமைகளில் இருந்து 17 லட்சத்து 16 ஆயிரத்து 802 ரூபாய் மதிப்பிலான அமெரிக்கா, சிங்கப்பூர், புருனை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.
DINASUVADU