மதுரைக்கு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வந்தது ராமர் ரதம்!
அயோத்தியில் இருந்து புறப்பட்ட ராமர் ரதம் தமிழக அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே 5 மாநிலங்களைக் கடந்து தமிழகத்தை வந்தடைந்தது. நேற்று தென்காசி வந்த அந்த ரதம், பின்னர் மதுரைக்கு வந்து சேர்ந்தது. இன்று ராமேஸ்வரத்தை வந்தடையும் ரதயாத்திரை, நாளை தூத்துக்குடி, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம் செல்ல உள்ளது. விஷ்வ இந்து பரிசத்தின் இந்த ரதயாத்திரை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடைபெறுகிறது. வழிநெடுக ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் ராமர் ரதத்தை வரவேற்று தீப ஆராதனைகள் காட்டினர்.
இதனிடையே, ரதயாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.