மதுபானங்களை ஏற்றி வந்த 3 லாரிகளுக்கு மர்மநபர்கள் காஞ்சிபுரத்தில் தீவைப்பு!
மர்மநபர்கள் ,காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் டாஸ்மாக் கிடங்கின் அருகே மதுபானங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 லாரிகளுக்கு தீவைத்தனர். ஓரிக்கையில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் அரசு மதுபான கிடங்கு செயல்படுகிறது.
இந்த கிடங்கிற்கு மதுபானங்களை ஏற்றி வந்த 3 லாரிகள், நேற்றிரவு கிடங்கின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நள்ளிரவில் அந்த 3 லாரிகளுக்கும் தீவைத்து விட்டு மர்மநபர்கள் தப்பி ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். லாரிகளில் இருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. தீ வைப்பு சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.