மதம் பிடித்த கஜா….. இருளில் முழ்கியது பாம்பன்….!!பலத்த சூறைக்காற்று…!12,398 பேர் முகாம்களில் தங்கவைப்பு…!!
ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் முழ்கியது.
மதம் கொண்ட புயலாக உருவாகியுள்ள கஜா நாகையின் கிழக்கே 125 கி.மீ தொலைவில் இந்த கஜா புயல் மையம் கொண்டுள்ளது. என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.கஜா புயலில் வெளி விளிம்பு கரையை தொட்ட நிலையில் சூறைக்காற்று அதிக அளவில் வீசி வருகிறது.
இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.இதன் முன்னோட்டமாக ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் புயலின் வலுப்பெற துவங்கிய நிலையில் பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.மேலும் இந்த புயலால் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்கள் விவரம் கடலூர் – 381 நாகை – 10,692 , ராமநாதபுரம் – 66 , தஞ்சை – 167 1,782 குழந்தைகள் உள்பட மொத்தம் 12,398 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU