மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி தமிழகத்திற்கு பொது விநியோகத்தில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு 81.1சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மின்விநியோகம் 100% உள்ளது. எனவே மண்ணெண்ணை அளவு குறைக்கப்பட்டது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் இணைப்புகள் பெரும்பாலான மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதால் மண்ணெண்ணெய் தேவை குறைந்துள்ளது என்றும், தமிழக அரசு ரேஷன் விநியோகத்துக்கு தேவையானால், சந்தை விலையில் மண்னெண்ணை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானிய விலை மண்ணெண்ணையில் ஒரு லட்சம் கிலோ லிட்டர் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 3.07லட்சம் கிலோ லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டு வந்தது.இது கடந்த ஆண்டு 2.04லட்சம் கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. தற்போது அது 1 லட்சம் கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு கெரசின் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…