மணல் கடத்தல் எத்தனை வழக்குகள்………..வெளிநாட்டு மணல் எடுத்த நவடிக்கை என்ன..??உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி..!!
வெளிநாட்டு மணல் இறக்குமதி விலை நிர்ணயம் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
உயர்நீதி மன்றத்த்தில் நடைபெற்ற இந்த வழக்கானது புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்திமங்கலம் வெள்ளாறு ஆற்று படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்காகும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத தமிழக அரசு மணலுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.பின்னர் 2017 ஆண்டுக்குப் பின் மணல் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் தொடரபட்டு அதில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும் தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு தடைவிதிக்கபட்டுள்ள இந்த நிலையில் வெளிநாட்டு மணல் இறக்குமதி அவற்றின் தர ஆய்வு மற்றும்விலை நிர்ணயம் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை ஏதேனும் எடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
DINASUVADU