மக்கள் வரிப்பணத்தில் பேரவை நடப்பதால் கூடுதல் நேரம் பேச அனுமதி வேண்டும்! தமிமுன் அன்சாரி
நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி மற்றும் துணை சபாநாயகர் இடையே கடும் வாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் அனைவரும் ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் போட்டுள்ளனர் எனவே சீக்கிரம் முடிங்க என்று துணை சபாநாயகர் கூறினார்.இதற்கு தமிமுன் அன்சாரி , மக்கள் வரிப்பணத்தில் பேரவை நடப்பதால் கூடுதல் நேரம் பேச அனுமதி வேண்டும். மற்ற நாடுகளில், நமது நாடாளுமன்றத்தில் பேரவை இரவு நேரங்களில் நடக்கிறது என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.