25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் சுயநலம் மற்றும் அரசியல் லாபத்திற்காக சட்டம் சரிவர இயக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.அதில் அவர் கூறியதாவது:-
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கிராமங்களின் பலம். இந்த சட்டம் இயற்றப்பட்டு இதே தேதியில் 25 ஆண்டுகள் முன்னர் இந்த சட்டம் இயற்றப்பட்டது.
இந்த கிராமப்பஞ்சாயத்துகளுக்கு, அந்த கிராம அளவிற்கேற்ப அந்த கிராமத்தின் மக்கள் தொகைக்கேற்ப 1 முதல் 5 கோடி வரை ஒதுக்கப்படும். 12524 கிராமங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.நம்மில் அதிகமானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். கிராமத்துடனான நமது தொடர்பு அனைவருக்கும் உண்டு.
அதிகாரத்தில் இருப்பவர்கள் கிராம சபையை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காகத்தான் இன்று நாம் இங்கே கூடியிருக்கிறோம்..
இந்த கிராம சபை என்பது ஊற்று போன்றது. அதை நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போயிற்று. இன்று மக்கள் நீதி மய்யம் இதை ஆரம்பித்துவைத்திருக்கின்றது.காவிரி பிரச்சனை போன்று இன்று நாம் சந்தித்துகொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வுகளை கிராம சபைகளில் எடுக்க முடியும்.
ஒவ்வொரு வருடமும் கட்டாயம் 4 முறை அதாவது, ஜனவரி 26, மே1,ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கூட்டப்படவேண்டும். அதை நினைவுபடுத்துவதற்காகத்தான் இந்த மாதிரி கிராம சபை.
பஞ்சாயத்துராஜ் சட்டம் சரிவர பயன்படுத்தாமல் இருந்ததற்கு அரசியல் காரணங்கள் இருந்தன. கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படுகிறதா என்பதே எனது கேள்வி .கிராம பஞ்சாயத்துகளுக்கான நிதியை பயன்படுத்தி இருந்தால் தமிழகத்தின் முகம் மாறியிருக்கு என்று கூறினார்.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் இந்த கிராம சபைகளை நடத்த வேண்டும் என்பதை நினைவு படுத்துவதற்கு ஒரு கடிதம் மக்கள் நீதி மய்யம் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நம்மில் அதிகமானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். கிராமத்துடனான நமது தொடர்பு அனைவருக்கும் உண்டு.ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது. முதலில் குறைக்க வேண்டும், அடுத்து தடுக்க வேண்டும், கடைசியாக ஒழிக்க வேண்டும்.நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போன கிராம சபை கூட்டத்தை, மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்துள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…
அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…
பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…