மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்றது, தேர்தல் ஆணையம்.
கடந்த 24-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்காக மய்யம்.காம் (www.maiam.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டது. கட்சியில் சேர விரும்புவோர், மய்யம் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும்படி கமல் அழைப்பு விடுத்திருந்தார். இந்தியா, அமெரிக்கா, அரபு நாடுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா , சவுதி அரேபியா, கனடா ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் மய்யம் இணையதளத்தை பார்வையிட்டு கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.