மக்களவை தேர்தல் வரும்ஏப்ரல்18-ம்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த தேர்தலின் போது கூறிய தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டவர்கள் மோடி ஆட்சியாளர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கண்டுகொள்ளாதவர்கள் பாஜ ஆட்சியாளர்கள். கஜா புயல் பாதிப்பை பார்வையிட மோடி வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையை எச்.ராஜா குறை சொல்கிறார். அவரை போன்ற அரை வேக்காடு அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்வது கிடையாது. இருப்பினும் சொல்கிறேன். சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா டெபாசிட் இழப்பார். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…