மக்கள் நலனும்,மதுக்கடை நலனும்…!!!! மது ஒழிப்பு இல்லை ஆனால் மதுக்கடையில் நெகிழி மட்டும் ஒழிப்பா…!!! அதிர்ச்சியில் அதிர்ந்த சமூக ஆர்வலர்கள்…!!!!
அரசு மதுக்கடைகளில் உள்ள பார்கள் அனைத்திலும் 100க்கு 100 சதவீதம் நெகிழி பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இதேபோல், தமிழகத்தில் உள்ள 1,300க்கும் மேற்பட்ட மதுக்கடை பார்களிலும் நெகிழி பயன்பாட்டை தடை செய்ய நிர்வாகத்தின் கீழ் 160 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
பிளாஸ்டிக் தடை அமல்படுத்துவதற்கு முன்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பார் உரிமையாளர்களுக்கு நெகிழி தடை குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்திருந்தனர். தடையை மீறி மதுக்கடை பார்களில் நெகிழியை பயன்படுத்தினால் பார் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனையை நடத்தினர். இந்த தொடர் சோதனையை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடை பார்களிலும் 100 சதவீதம் நெகிழி பயன்பாடு ஒழிக்கப்பட்டு விட்டதாக மதுக்கடை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், நெகிழி தடை அமல் படுத்துவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து மாவட்டங்களிலும் பார் உரிமையாளர்களை அழைத்து தடை குறித்து எடுத்துரைக்க கூட்டங்களை நடத்தினோம். இந்த கூட்டத்தில் நெகிழி குவளைளுக்கு பதிலாக அலுமினிய குவளை அல்லது கண்ணாடி குவளை ஆகியவற்றை பயன்படுத்திகொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து பல பார் உரிமையாளர்கள் நெகிழி தடைக்கு ஏற்றவாறு மாற்று நடவடிக்கையை கொண்டு வந்தனர். தற்போது அனைத்து மதுக்கடை பார்களிலும் நெகிழி பயன்பாடு 100 சதவீதம் தடை செய்யப்பட்டுவிட்டது.
தடையை மீறி நெகிழியை பயன்படுத்தியதாக ஒருசிலர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், சம்பந்தப்பட்ட பாரிலும் மதுக்கடைகளிலும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இதேபோல், மதுக்கடை பார்களில் நுழைவு கட்டணம் வசூல் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி நுழைவு கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார். இந்த தகவல் மூலம் அரசு மக்கள் நலனுக்கும்,மதுக்கடை நலனுக்கும் அரசு அயராது பாடுபடுவதாக பொதுமக்கள் தங்களுக்குள் சலசலக்கின்றனர்.
DINASUVADU.