மக்கள் கோபம்…அரசு துரிதமுடன் செயல்பட வேண்டும்…..தமிழிசை சவுந்தரராஜன்…!!
கஜா புயலால் பாதித்த மக்களின் கோபம் உணர்ந்து அரசு துரிதமுடன் செயல்பட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது.
இந்த புயல் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாலும், சாலைகளில் மரங்கள் விழுந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நாகை மாவட்டத்தில் தண்ணீர் சூழ்ந்த சில கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனி தீவு போல் காட்சி அளிக்கின்றன.
புயல் பாதித்த பகுதிகளில் உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, புயலால் பாதித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. அந்த மக்களின் கோபத்தில் நியாயம் உள்ளது.
பிரதமர் மோடி மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ப. சிதம்பரம் பேச கூடாது. நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்த அவர் என்ன செய்தார் என்று நினைத்து பார்க்க வேண்டும்.கஜா புயலால் பாதித்த மக்களின் கோபம் உணர்ந்து அரசு துரிதமுடன் செயல்பட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
dinasuvadu.com