மக்களே உஷார்!உயிர்பலி வாங்கும் நிஃபா உயிர்க்கொல்லி வைரஸ்!விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!
நிபா வைரஸ் தாக்குதலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பு அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் , கேரளாவில் நிபா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, தமிழகத்தில் பரவாமல் தடுக்க நடவடிக்கை என்றும் கேரள எல்லை மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பரவும் முறை:
பழம் தின்னும் வௌவால் மற்றும் பன்றிகள் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து, மருத்துவமனையை அணுகவும் என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கேரளாவில் நிஃபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி,10 பேர் உயிரிழப்பு:
கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிஃபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி,10 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மத்திய சுகாதாரத்துறை குழு விரைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.