OPS: மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட அவரின் ஆதரவாளர் மருது அழகுராஜ் விருப்ப மனு அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணிக்கு செல்லலாம் என்று கூறப்பட்டாலும் இதுவரை அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனிடையே, ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒன்றை தொடங்கியுள்ளார். தேர்தலில் ஓ.பி.எஸ் அணி சார்பாக போட்டியிட விரும்புவோர் இன்று நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றே விருப்ப மனுவையும் அளித்து நேர்காணலிலும் கலந்துக் கொள்ள அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது, இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் விருப்ப மனு அளித்துள்ளார்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…