மகளிர் விடுதி உரிமையாளர்களின் மனுக்களை சென்னை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்
மகளிர் விடுதி உரிமையாளர்களின் மனுவை பரிசீலித்து 2 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் தங்கும் விடுதியில், ரகசிய கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்திற்குப்பின் சென்னை மாவட்ட ஆட்சியர் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் விடுதியினை பதிவு செய்ய வேண்டும் என்றும், உரிமம் இல்லாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என ஆட்சியர் அறிவித்திருந்தார்.
இதற்கு விடுதி உரிமையாளர் நல சங்கத்தினர், 6 மாத கால அவகாசம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இது தொடர்பான விசாரணையின்போது, விடுதி உரிமையாளர்களின் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.