ப்ளஸ் டூ தேர்வு எழுதிய தமிழக மத்தியச் சிறைகளில் 73 பேரில், 4 பெண்கள் உட்பட 62 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மத்தியச் சிறையில் உள்ள தமிழழகன் என்பவர் ஆயிரத்து 50 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், வேலூர் சிறைக் கைதியான பால்ராஜூ ஆயிரத்து 22 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சென்னை புழல் சிறையில் உள்ள கூழை இப்ராஹீம் ஆயிரத்து 5 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
புழல், சேலம், கடலூர் மத்திய சிறைகளில் தேர்வெழுதிய அனைத்துக் கைதிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவை, பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, வேலூர் சிறைகளிலும், வேலூர் பெண்கள் சிறையிலும் ப்ளஸ் டூ தேர்வை எழுதிய பெரும்பாலான கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.