திண்டுக்கல் மாவட்டத்தில் சக போலீசார் முன்னிலையில் காவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து உதவி ஆய்வாளர் காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தண்டிக்குடி காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் சுபக்குமார். இவர் நேற்று காலை காலை 8 மணி அணிவகுப்பின் போது, எஸ்.ஐ. முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன், காவல்நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைகண்ட சக காவலர்கள் முருகேசனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்நிலையத்தில் எஸ்.ஐ. ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டித்தீ போல பரவியது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சுபக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சக காவலர்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட சிகிச்சை நிறைவடைந்த நிலையில் தற்போது முருகேசன் நலமுடன் உள்ளார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை மனஉளைச்சல் தரும் அளவில் நடந்து கொள்ள கூடாது என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
DINASUVADU
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…