சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் மணி, 72 வயதான இவர், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக உள்ளார். வழக்கம் போல தனது சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்த அவரை ஆட்டோவில் வந்த 3 பேர் வழிமறித்து தாங்கள் போலீஸ்காரர்கள் என்றும்,குற்ற வழக்கொன்றில் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர்.
அங்கிருந்து அமைந்தகரை வரை அழைத்து சென்று அவரிடம் இருந்த தங்க மோதிரம், பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். போலீஸ்காரர்கள் எனக்கூறி மூதாட்டிகள், முதியவர்களை கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பல், இது போன்று ஆட்டோவில் கடத்திச் சென்று வழிப்பறி செய்யும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்தேறி வருகிறது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…