போலீசாரை தள்ளிவிட்டு வாக்குபெட்டியை திருடிச்சென்ற குண்டர்…!குண்டர் சட்டத்தில் கைது
- புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடியில் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற மர்ம நபர் பிடிப்பட்டார்
- வாக்குப்பெட்டியை திருடிச் சென்ற மூர்த்தி என்ற இளைஞர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தகவல்
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகின்றது.அதன்படி 27 மாவட்டங்களில் முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு ஆனது நேற்று காலை 7 மணியளவில் தொடங்கியது. வாக்குச்சாவடிக்கு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையினை வாக்குகளாக செலுத்தினர். அவ்வாறு நடைபெற்ற தேர்தலுக்காக 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் தேர்தல் நடைபெறும் இடங்களில் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் 63,000 போலீசார் ஈடுபடுபட்டனர்.மாலை 5 மணிக்கு வாக்கு பதிவானது நிறைவடைந்தது.பின்னர் வாக்குகள் பதிவான பெட்டிகளுக்கு எல்லாம் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடியின் பின்பக்க கதவை உடைத்து எரிந்துவிட்டு,காவலர்களை தள்ளிவிட்டு உள்ளை நுழைந்த மர்ம நபர்கள்அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியை கலவாடி சென்றனர்.வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தள்ளிவிட்டு பெட்டியை கலவாடி சென்றது கடும் பேசுபொருள் ஆனது இந்நிலையில் போலீசார் விசாரணை முடுக்கி விட்ட நிலையில் பெட்டியை திருடிச் சென்றது மூர்த்தி என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.
வாக்குபெட்டியை திருடிய மூர்த்தியை காவல்துறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் அவர் ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளார் .அந்த எச்சரிக்கை யாது எனில் 2ஆம் கட்ட தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது விதிமீறலில் எவரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உமா மகேஸ்வரி உறுதிப்பட தெரிவித்துள்ளார்