போலி சாதி சான்றிதழ் விவகாரம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்றம்..!
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போலி சாதி சான்றிதழ் பெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சிவஜெயப்பிரகாஷ் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், தான் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போலி சாதிச்சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், ஆனால், அவர் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று அவர் தொடுத்த வழக்கில் தெரிவித்துள்ளார். கிருஷ்ணசாமி பெற்றுள்ள சாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போலி சாதிச்சான்றிதழ் புகார் தொடர்பாக கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வருகிற ஜனவரி 4 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.