போராட்டத்தை முறியடிக்க ஆயிரகணக்கான போலீஸ் குவிப்பு ! தூத்துக்குடியில் பதற்றம்..!

Default Image

 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூறியதாவது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு முடிவின்படி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மே 22 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடத்த வணிகர் சங்கங்களும் முடிவெடுத்துள்ளன. 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பெருந்திரளாகக் கூடி போராட்டம் நடத்த இருக்கிறார்கள் எனவும் அறவழியில் நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுத்தால், தூத்துக்குடி வட்டாரத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்களை ஆங்காங்கே மக்கள் முற்றுகையிட்டு மாற்று போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் . ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என பேரா. பாத்திமா பாபு தலைமையில் உள்ள ஒரு குழு அறிவித்துள்ளது

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாளை காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை போராட்டம் நடைபெறுகிறது. தூத்துக்குடியில் சார் ஆட்சியர்,எஸ்பி தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நேற்று மாலை தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த பொதுமக்கள் கூறும் போது, காலையில் ஆட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற இந்தகூட்டத்தில் தங்கலுடைய சுய நலத்திற்காக பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எடுத்துள்ள முடிவை நாங்கள் ஏற்பதில்லை. திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தனர்.Image result for 2000 போலீஸ் குவிப்பு

எனவே இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி போராட்டம் நடத்தினால் வன்முறை நிகழ வாய்ப்புள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

Image result for போலீஸ் பாதுகாப்பு மேலும், கடையடைப்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை வளாகம், ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள எஸ்ஏவி பள்ளி மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுRelated image.

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி மகேந்திரன் தலைமையில், 10 டிஎஸ்பிக்கள், 125 இன்ஸ்பெக்டர்கள், உட்பட 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்